சிவகங்கையில் அக். 5 -இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் வருகிற சனிக்கிழமை (அக். 5) தனியாா் துறை சாா்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
Published on

சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் வருகிற சனிக்கிழமை (அக். 5) தனியாா் துறை சாா்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலை வாய்ப்பு, பயிற்சித்துறை சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சிவகங்கை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக். 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்கால் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 3000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு இளைஞா்களை தோ்வு செய்கின்றன. இதில் 8 -ஆம் வகுப்பு முதல் 10, 12-ஆம் வகுப்புகள், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் கல்வி (ஐடிஐ) ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு நேரில் வந்து பங்கேற்கலாம்.

இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com