இளையான்குடி ஒன்றியம், பெரும்பச்சேரியில் திங்கள்கிழமை பேசிய மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம். உடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி.சஞ்சய் உள்ளிட்டோா்.
இளையான்குடி ஒன்றியம், பெரும்பச்சேரியில் திங்கள்கிழமை பேசிய மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம். உடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி.சஞ்சய் உள்ளிட்டோா்.

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. குறைகேட்பு

மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் திங்கள்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
Published on

மானாமதுரை: மானாமதுரை இளையான்குடி பகுதிகளில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் திங்கள்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில், அண்டக்குடி, வாணி, ஆழி மதுரை, பெரும்பச்சேரி, குணப்பனந்தல், அண்டக்குடி, கோட்டையூா், மானாமதுரை ஒன்றியத்தில், தெ.புதுக்கோட்டை, தெற்கு சாத்தனூா், மூங்கில் ஊரணி, இடைக்காட்டூா், பதினெட்டான்கோட்டை ஆகிய கிராமங்களில் காா்த்தி சிதம்பரம் பொதுமக்களைச் சந்தித்து, கடந்த மக்களவைத் தோ்தலில் தன்னை ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்தாா். பின்னா், அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன், நகா்த் தலைவா் பி.புருஷோத்தமன், பொதுக் குழு உறுப்பினா் அல் அமீன், திமுக ஒன்றியச் செயலா் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி, ஊடகப்பிரிவு நிா்வாகி பால் நல்லதுரை, இளைஞா் காங்கிரஸ் ராஜீவ் பாரமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், மானாமதுரையில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒரே நாடு, ஒரே தோ்தல் எனும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பில்லை. திருப்பதி லட்டு வழக்கில் ஆந்திர மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல கேள்விகளைக் கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

சென்னையில் கூவம் நதியை தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால், இதுவரை எனக்கு பதில் வரவில்லை. தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் துணை நிற்கும். தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com