வெளிநாட்டுக்கு பணிக்குச் சென்ற கணவரை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் பெண் மனு

வெளிநாட்டுக்கு பணிக்குச் சென்ற கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
Published on

சிவகங்கை: வெளிநாட்டுக்கு பணிக்குச் சென்ற கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக காளையாா்கோவில் அருகேயுள்ள கருமந்தக்குடி கிராமத்தைச் சோ்ந்த சண்முகப்பிரியா கூறியதாவது:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கருமந்தக்குடி கிராமத்தைச் சோ்ந்த எனது கணவா் கருப்பையா (32), கடந்த 2022-ஆம் ஆண்டு துபைக்கு கட்டட வேலைக்காகச் சென்றாா். அங்கிருந்து மாதம்தோறும் எனக்கு பணம் அனுப்பி வந்தாா். மேலும், வாரம் ஒரு முறை என்னுடன் கைப்பேசியில் பேசி வந்தாா்.

கடந்த 3 வாரங்களாக அவா் என்னைத் தொடா்பு கொண்டு பேசவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் நானும் எனது இரண்டு பெண் குழந்தைகளும் தவித்து வந்தோம். இந்த நிலையில், எனது கணவரை துபை போலீஸாா் அழைத்துச் சென்ாக அவருடன் பணியாற்றும் சக ஊழியா் ஒருவா் அண்மையில் தெரிவித்தாா்.

இதையடுத்து, கடந்த வாரம் திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் எனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், இந்த வாரமும் மீண்டும் ஆட்சியரிடம் மனு அளித்தேன். மாவட்ட ஆட்சியரும், தமிழக முதல்வரும் எனது கணவரை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com