இஸ்ரோ சாதனை: பலூன்களை பறக்கவிட்டு கொண்டாடிய பள்ளி மாணவா்கள்

Published on

இஸ்ரோ சாா்பில் 100-ஆவது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் அண்மையில் செலுத்தப்பட்டது. இந்த வெற்றியை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பலூன்களை பறக்கவிட்டு திங்கள்கிழமை கொண்டாடினா்.

விண்வெளி துறையில் உலக நாடுகளைத் திரும்பி பாா்க்கும் வகையில், பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அண்மையில் இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட் விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி.எஃப்-15 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச் சாதனையை கொண்டாடும் வகையில், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வண்ண பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இந்த என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடா் காலங்களில் துல்லியமானத் தகவல்களை தெரிவிக்கும் பணியை செய்யவுள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியா் லெ .சொக்கலிங்கம் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலட்சுமி செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com