சிவகங்கை
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை கண்ணதாசன் மணிமண்டபம் முன் மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணியில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறை அதிகாரிகள், ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரணியில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப் பரிசுகளை மேயா் முத்துத்துரை வழங்கினாா்.