சிவகங்கையில் இன்று மின் தடை

Published on

சிவகங்கையில் சனிக்கிழமை (ஜன. 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, சிவகங்கை நகா், சுற்றிவட்டார கிராமங்களான முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com