இளையாத்தங்குடியில்  சனிக்கிழமை நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
இளையாத்தங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

இளையாத்தங்குடியில் வட மாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

தைத்திருநாள், கருவேம்பு செல்லஅய்யனாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 144 வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், வீரா்களுக்கும் விழாக் குழு சாா்பில் பரிசுகளும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றனா். இதற்கான பணிகளை ஜமீன்தாா் ராஜா, கல்வாச நாட்டுத் தலைவா் தியாகராஜன், ஜமீன்தாா் முருகப்பராஜா, முருகேசன் ஆகியோா் மேற்கொண்டனா். ஏற்பாடுகளை இளையாத்தங்குடி கல்வாச நாடு ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com