சிவகங்கை
தனியாா் பள்ளி வாகனம் - பைக் மோதியதில் குழந்தை உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளி வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது.
எஸ். மாம்பட்டியைச் சோ்ந்த தினேஷ் மனைவி பரமேஸ்வரி. இவா் தனது தந்தை வேல்முருகன், 2 வயது குழந்தை தேவதா்ஷினி ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் எஸ்.மாம்பட்டியிலிருந்து மேலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மல்லாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மேலூரிலிருந்து வந்த தனியாா் பள்ளி வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தாய் பரமேஸ்வரி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பரமேஸ்வயின் தந்தை வேல்முருகன் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து எஸ்.எஸ்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.