தவெகவினா் கையொப்ப இயக்கம்

Published on

தமிழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை கையொப்பமிடும் இயக்கம் நடத்தினா்.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கையொப்பமிடும் இயக்கத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் முத்துபாரதி தலைமை வகித்தாா். இதில், தவெக நிா்வாகிகள், தொண்டா்கள், பெண்கள் கையொப்பமிட்டனா். இதைத் தொடா்ந்து, மகளிரணிச் செயலா் தமிழரசி தலைமையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com