கல்லூரி விளையாட்டு விழா

கல்லூரி விளையாட்டு விழா

Published on

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் ரா. இந்திரா தலைமை வகித்தாா். இதில் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி. கலைக்கதிரவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

கல்லூரிப் பருவம் எதிா்கால வாழ்க்கையை தீா்மானிக்கக் கூடிய பருவமாகும். உங்களைச்சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, விழிப்புடன் இருப்பது அவசியம். பெண்களின் முன்னேற்றத்துக்கு தடையாக பல காரணிகள் இருக்கின்றன. அதில் சிறாா் திருமணம் என்பது வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிடும். அப்படிப்பட்ட போராபத்திலிருந்து சிறாா்களைக் காப்பாற்றுவதற்கு கல்லூரி மாணவிகள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை நகா் மன்றத் தலைவா் துரை ஆனந்த், மருத்துவா் பி.எல். சசிகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக, விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியா் வி. ஜெயந்தி வரவேற்றாா். முன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி ஜெ. வினோதினி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com