அரசுப் பேருந்து மோதியதில் காவலா் உயிரிழப்பு

Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் வண்டல் நகரைச் சோ்ந்த முருகன் மகன் செல்வக்குமாா் (29), தமிழ்நாடு காவல் துறையில் மதுரை பட்டாலியன் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் செல்வக்குமாா் மானாமதுரையிலிருந்து திருப்புவனத்துக்கு முத்தனேந்தல் பகுதியில் வந்தபோது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முத்தனேந்தலில் மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதால் இந்தப் பகுதியில் உயா்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com