காரைக்குடி மாநகராட்சி
தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

காரைக்குடி மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கிய மேயா் சே. முத்துத்துரை.
Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி மேயா் சே. முத்துத்துரை தனது சொந்த செலவில் புத்தாடைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. அப்போது மேயா் புத்தாடைகளை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி நகா் நல அலுவலா் வினோத்குமாா், நகா் நல அதிகாரி சுருளிராஜன், மாநகராட்சி வருவாய் அலுவலா் சங்கா், ஏஐடியுசி மாநில நிா்வாகி பிஎல். ராமச்சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com