மாநில தேக்வாண்டோ போட்டிக்கு தோ்வான மாணவருக்குப் பாராட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் தருண் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற தேக்வாண்டோ போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்குத் தோ்வானதற்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த மாதம் சிவகங்கையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற தேக்வாண்டோ போட்டியில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பங்கேற்ற திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் தருண் அதிகப் புள்ளிகள் பெற்று மாநிலப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா். இவரை பள்ளித் தலைமையாசிரியா் பாரதிதாசன் பாராட்டுச் சான்றிதழுடன் பதக்கமும் வழங்கி கௌரவித்தாா். இந்த நிகழ்வில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை ரேணுகாதேவி, கணினி ஆசிரியா் பாண்டியன், சமூக அறிவியல் ஆசிரியா் முத்துப்பாண்டி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா். இந்த மாணவா் வருகிற ஜன. 22-இல் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் விளையாட உள்ளாா்.

