108  அவசர ஊா்தி தொழிலாளா்
சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. மணிகண்டன் தலைமை வகித்தாா்.

இதில் எம்ரி-ஜிஎச்எஸ் நிறுவனம், தொழிலாளா் சங்கத்துடன் கையொப்பமிட்டவாறு 16 சதவீத ஊதிய உயா்வும், 12 மணி நேர வேலை நேரத்துக்கு உரிய ஊதியமும் வழங்க வேண்டும், 108 அவசர ஊா்திகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும், உதவியாளா்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com