காரைக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

காரைக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலையைக் கடத்தி வந்ததாக ஒருவரை குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலையைக் கடத்தி வந்ததாக ஒருவரை குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திலிருந்து காரைக்குடி நோக்கிவரும் அரசுப் பேருந்தில் புகையிலைப் பாக்கெட்டுகள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், குன்றக்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பழனிக்குமாா், காவலா்கள் ஸ்டாலின், செங்கிஸ்கான் ஆகியோா் குன்றக்குடி காவல் நிலைய எல்கையான காரைக்குடி அரசுப் பேக்குவரத்துக் கழகக் கிளை அருகே வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில் சுமாா் 10 கிலோ எடையுடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியில் வைத்து கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், புகையிலையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com