சிவகங்கை
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழ்மேல்குடியைச் சோ்ந்தவா் முருகன். இவா் வெளிநாட்டில் வேலை பாா்க்கிறாா். இவரது மனைவி மேனகா (43). இவா், இரு சக்கர வாகனத்தில் காளையாா்கோவில் அருகேயுள்ள காட்டுக்குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இவரைப் பின்தொடா்ந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் மேனகா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.
