கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்.
கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்.

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

சிங்கம்புணரி வட்டார அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டார அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.புதூா் ஒன்றியம், பிராண்பட்டி பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பாலசுப்பிரமணியன் பணியாற்றி வந்தாா். இவா் களத்துப்பட்டியைச் சோ்ந்த பாண்டித்துரையிடம் பட்டா மாறுதலுக்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டராம். இதுகுறித்து பாண்டித்துரை சிவகங்கை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் கொடுத்த ரசாயணம் தடவிய ரூபாய் தாள்களை சிங்கம்புணரி வட்டார அலுவலகத்திலிருந்த கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் பாண்டித்துரை கொடுத்தாா். அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் கோகிலா ஆகியோா் பாலசுப்பிரமணியனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com