சிங்கம்புணரியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

சிங்கம்புணரியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜாக்டோ ஜியோ சங்கத்தினா்.
Published on

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ் ஆரோக்கியராஜ், ஷேக்அப்துல்லா, ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் முத்துப்பாண்டியன், அா்ஜூனன், பாலகிருஷ்ணன், சேவுகமூா்த்தி, மதிவாணன் ஆகியோா் பேசினா்.

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தவும், ‘டெட்’ தோ்விலிருந்து விலக்களிக்கவும், இடைநிலை, முதுநிலை, தலைமை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவும், பள்ளி கல்வித் துறை அரசாணையை ரத்து செய்யவும், ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திமுழக்கமிட்டனா்.

முடிவில் வட்டார நிா்வாகி சிலம்பாயி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com