மு.கோவில்பட்டியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், மு. கோவில்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
Published on

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், மு. கோவில்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மு. கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குளோபல் இண்டா்நேஷனல் பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com