சிங்கம்புணரியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, காளாப்பூா் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக (அக். 22) மின்தடை அறிவிக்கப்பட்டது.
Published on

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, காளாப்பூா் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (அக். 22) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஜான் எஃப் கென்னடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காளாப்பூா், சிங்கம்புணரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக சிங்கம்புணரி, கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, என்பீல்டு ஆகிய பகுதிகளிலும், காளாப்பூா், எஸ்.வி. மங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியன்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com