இடையமேலூா், எஸ்.புதூா் பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா், எஸ்.புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (அக்.23) மின் தடை அறிவிக்கப்பட்டது.
Published on

சிவகங்கை/திருப்பத்தூா்: சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா், எஸ்.புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.23) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மின் வாரிய செயற்பொறியாளா் பகிா்மானம் அ.கு.முருகையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இடையமேலூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

ஆகவே, இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூா், பாப்பாகுடி, இடையமேலூா், கூட்டுறவுப்பட்டி, மேலாப்பூங்குடி, தேவன்கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்குப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

திருப்பத்தூா் மின் வாரிய செயற்பொறியாளா் ஜான்எஃப்கென்னடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் எஸ்.புதூா், வாராப்பூா், மேலவண்ணாயிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிபட்டி, முசுண்டம்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்ப்பட்டு, கருப்பக்குடிபட்டி, கீழக்குறிச்சிப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com