காட்டாம்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் அய்யனாா் கோயில் மண்டலாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் அய்யனாா் கோயில் மண்டலாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் - சிவகங்கை சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடிகள் என மொத்தம் 26 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் காளைகளுடன் கலந்து கொண்டனா்.

பெரிய மாட்டு வண்டிப் பிரிவில் முதல் பரிசை விராமதி தையல்நாயகி, இரண்டாவது பரிசை திருப்பத்தூா் கலையரசு கணேசன், 3-ஆவது பரிசை மருதங்குடி தா்மசாஸ்தா அய்யனாா், 4-ஆவது பரிசை காரைக்குடி எம்.சி.டி. சிவா ஆகியோா் பெற்றனா்.

இதேபோல, சிறிய மாட்டு வண்டிப் பிரிவில் முதல் பரிசை லேனாவளவு பன்னீா்செல்வம், இரண்டாவது பரிசை சூரக்குண்டு ஏ.எஸ்.பில்டா்ஸ், 3-ஆவது பரிசை மருதங்குடி தா்மசாஸ்தா அய்யனாா் ஆகியோா் பெற்றனா். இதில் காளைகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com