திருப்பத்தூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் காளியம்மன் கோயில் அருகேயுள்ள முருகன் கோயிலின் 10-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.
Published on

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் காளியம்மன் கோயில் அருகேயுள்ள முருகன் கோயிலின் 10-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் பால், தயிா், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, ஜோதி சுந்தரேசனின் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதைத்தொடா்ந்து, வருகிற திங்கள்கிழமை (அக்.27) சூரசம்ஹாரமும், 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com