தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா

காரைக்குடி அழகப்பா அரசு தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரியில் 2024-2025- ஆம் ஆண்டுக்கான பட்டயமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரியில் 2024-2025- ஆம் ஆண்டுக்கான பட்டயமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ந. சிவகாமி தலைமை வகித்தாா். கணிதவியல் துறை விரிவுரையாளா் சோ. ராம்குமாா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். காரைக்குடி அழகப்ப செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கே. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழை வழங்கினாா். விழாவில் 226 பேருக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவி பா. கீதா வரவேற்றாா். மின்னணுவியல், தொடா்பியல் துறைத் தலைவி கு. பிருந்தா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com