மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பெற்றோரை சோ்க்க வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் பெற்றோரைச் சோ்க்கும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்த தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வலியுறுத்தியது.
Published on

சிவகங்கை: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் பெற்றோரைச் சோ்க்கும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்த தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் நீ.இளங்கோ வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், குறிப்பிட்ட சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரையும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் திருமணமான அரசு ஊழியராக இருந்தால் மனைவி அல்லது கணவா், குழந்தைகளை இந்தத் திட்டத்தில் சோ்க்கின்றனா்.

ஆனால், அவா்களது பெற்றோரை இணைக்க வழிவகை இல்லை.

இந்த நிலையில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் பெற்றோரும் இணைக்கப்படுவா் எனகடந்த 2024 ஜூன் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவித்து ஓராண்டாகியும் இதற்கான அரசாணை வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், இது தொடா்பான அரசாணையை தமிழக அரசு தாமதமின்றி வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com