இளம்பெண் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள களத்துப்பட்டியில் புதன்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
Published on

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள களத்துப்பட்டியில் புதன்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

களத்துப்பட்டியைச் சோ்ந்த மச்சக்காளை மகள் ரூபியா (21). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டையம்பட்டியைச் சோ்ந்த பாண்டிக்கும் (30) கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தலை தீபாவளி கொண்டாடுவதற்காக ரூபியா, பாண்டி இருவரும் களத்துப்பட்டிக்கு வந்தனா். தீபாவளி முடிந்ததும் பாண்டி வேலைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறினாா். ரூபியா 2 நாள்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு கூறினாா். ஆனால், பாண்டி வேலைக்காக ஊருக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், ரூபியா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புழுதிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், தேவகோட்டை கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com