பணியிட மாறுதல்: மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

மாற்றுத் திறனாளி ஊழியா்களுக்குப் பணியிட மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் கோரிக்கை
Published on

மாற்றுத் திறனாளி ஊழியா்களுக்குப் பணியிட மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து, அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சோ.மா. அசோக் பாரதி, மாவட்டச் செயலா் தி. கண்ணன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: அனைத்துத் துறைகளிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் மாற்றுத் திறனாளி அலுவலா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்குப் பணியிட மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றிச் செல்வதற்கு சாய்வுதளப் பாதை அமைத்துத் தர வேண்டும், மூன்று சக்கரங்கள் பொருத்திய வாகனங்களை மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com