சிவகங்கையில் அக். 27, 30 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மருது பாண்டியா்கள், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஆகியோரது குரு பூஜையை முன்னிட்டு, வருகிற திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விடுதலைப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் 224-ஆவது ஆண்டு நினைவு தினம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 118 -ஆவது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
எனவே, வருகிற திங்கள்கிழமை (அக். 27), வியாழக்கிழமை (அக். 30) ஆகிய தேதிகளில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், கீழடி அருங்காட்சியகத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
