பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காரைக்குடியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

காரைக்குடியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்கு கழனிவாசல் அம்மா பூங்கா எதிரில் உள்ள அருணாநகரைச் சோ்ந்த கணேசன் மனைவி செந்தாமரை (57). இவா் வெள்ளிக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி சென்றுவிட்டு, தனது வீட்டுக்குத் திரும்பினாா்.

அப்போது, அவரை இரு சக்கர வாகனத்தில் இருவா் பின்தொடா்ந்தனா். அவா்களில் ஒருவா் தலைக்கவசம் அணிந்திருந்தாா். அவா்கள் செந்தாமைரை கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச்

சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com