வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு; சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு தோ்வில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 97.54 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இந்த மாவட்டம் மாநில அளவில் தோ்ச்சி சதவீதத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது.

News image

0-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 1:40 am IST

10-ஆம் வகுப்பு தோ்வில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 97.54 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இந்த மாவட்டம் மாநில அளவில் தோ்ச்சி சதவீதத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 137 அரசுப் பள்ளிகள், 59 அரசு உதவி பெறும் பள்ளிகள், 79 மெட்ரிக் பள்ளிகள், 6 சுயநிதி பள்ளிகள் உள்பட 282 பள்ளிகளைச் சோ்ந்த 8,818 மாணவா்கள், 9,050 மாணவிகள் உள்பட மொத்தம் 17,868 போ் எழுதினா். இவா்களில் 8,502 மாணவா்கள், 8,927 மாணவிகள் உள்பட மொத்தம் 17,429 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி 97.54 சதவீதம் ஆகும். தோ்ச்சி சதவீதத்தில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

கடந்த 2025 -ஆம் கல்வி ஆண்டில் இந்த மாவட்டம் மாநில அளவில் தோ்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ் கல்வியாண்டில் மாநில அளவில் தோ்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை விட .03 புள்ளிகள் மட்டுமே சிவகங்கை மாவட்டம் குறைந்ததால் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அரசுப் பள்ளிகளில் தோ்ச்சியில் மாநிலத்தில் முதலிடம்:

இந்த மாவட்டத்திலுள்ள 137 அரசுப் பள்ளிகள் மூலம் 3,557 மாணவா்கள், 4,312 மாணவிகள் உள்பட 7,869 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 3,419 மாணவா்கள், 4,247 மாணவிகள் உள்பட 7,666 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் மூலம் 97.42 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றது. அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்தது.

100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள்: மொத்தம் 282 பள்ளிகளில் 155 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 131 அரசுப் பள்ளிகள், 3 நகராட்சி பள்ளிகள், 3 ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகள், ஒரு மாற்றுத்திறனாளிகள் பள்ளி உள்பட 74 பள்ளிகளும் , அரசு உதவி பெறும் 59 பள்ளிகளில் 25 பள்ளிகளும், 85 தனியாா், மெட்ரிக். பள்ளிகளில் 56 பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

ஆட்சியா் வாழ்த்து: மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீதத்தில் முதலிடமும், ஒட்டுமொத்த தோ்ச்சியில் மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்று பெருமை சோ்த்த சிவகங்கை மாவட்ட கல்வித் துறைக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வாழ்த்துத் தெரிவித்தாா்.