தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், வியாழக்கிழமை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 185 பேர் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான தடகளப் போட்டிகளில் 42 பேரும், குழு போட்டிகளில் 86 பேரும், பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் 26 பேரும், குழு போட்டிகளில் 31 பேரும் பங்கேற்றனர்.
போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள்: ஆண்கள் தடகளம் பிரிவு 100 மீ. ஓட்டம்- தேனி கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளர் பி.சௌந்தரராஜன். 200 மீ. ஓட்டம்- டி.பொம்மிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அலுவலக உதவியாளர் ஆர்.மாணிக்கமுத்து. 800 மீ. ஓட்டம்- கல்வித் துறைப் பணியாளர் கே. சிவன். 1,500 மீ. ஓட்டம்- தேனி மின்வாரியப் பணியாளர் எம். கோபி. நீளம் தாண்டுதல்- தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பி. மூர்த்தி. உயரம் தாண்டுதல்- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக இளநிலை உதவியாளர் ஏ. வடிவேல்முருகன். குண்டு எறிதல்- எ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் பீட்டர். 400 மீ. தொடர் ஓட்டம்- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைப் பணியாளர்கள் கார்த்திக்குமார், தர்மராஜ், பிரேம்குமார், யோகேஷ்குமார்.
பெண்கள் தடகளப் பிரிவு 100 மீ. ஓட்டம்- ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கே. கோகிலா. 200 மீ. ஓட்டம்- போடி பங்கஜம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் யு. உத்தமசீலி. 400 மீ. ஓட்டம்- டி.கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மீனாம்பிகா. 800 மீ. ஓட்டம்- ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சகாயராணி. நீளம் தாண்டுதல்- ஆட்சியர் அலுவலக வளர்ச்சித் துறை பணியாளர் பி. திருமலைச்செல்வி, குண்டு எறிதல் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எம். பொன்செல்வி, 400 மீ., தொடர் ஓட்டம் மாவட்டக் கல்வித் துறை பணியாளர்கள் ஆர். கோகிலா, எஸ். மலர்விழி, உத்தமசெல்வி, கே. கோகிலா.
ஆண்கள் மேஜை பந்து ஒற்றையர் பிரிவு- கல்வித் துறை பணியாளர் பி. சுரேஷ். இரட்டையர் பிரிவு கல்வித் துறை பணியாளர்கள் பி. சுரேஷ், எஸ் .சிவக்குமார். பெண்கள் மேஜைப் பந்து ஒற்றையர் பிரிவு- கல்வித் துறை பணியாளர் மீனாம்பிகை. இரட்டையர் பிரிவு கல்வித் துறை பணியாளர்கள் மீனாம்பிகை, சிறுமலர். பெண்கள் இறகு பந்து இரட்டையர் பிரிவு- தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பொன்செல்வி, எஸ்.சொர்ணா.
ஆண்கள் கையுந்து பந்து போட்டியில் தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, டி.கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை பணியாளர்கள் கொண்ட அணி முதலிடம் வென்றது.
கூடைப் பந்து போட்டியில் மாவட்ட வேளாண்மை துறை பணியாளர்கள் அணியும், கபடிப் போட்டியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், பொதுப்பணித் துறை, கல்வித் துறை, கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கொண்ட அணியும் முதலிடம் வென்றன.
போட்டிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.