நத்தம் அருகே பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகாளய அமாவாசை விழா நடைபெற்றது.
இதையொட்டி, சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து புனித நீராடி, நெய் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 9 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
மேலும், அருகிலுள்ள காமாட்சி மெüன குருசாமி மடத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.