தேனி மாவட்ட அளவில் திங்கள்கிழமை இரவு 195.30 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 44 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. திங்கள்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், மாலை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. பின்னர், இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
தேனி மாவட்ட அளவில் மொத்தம் 195.30 மி.மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு (மி.மீ): பெரியகுளம்-15, வைகை அணை-37.20, மஞ்சளாறு அணை-15, ஆண்டிபட்டி-44, அரண்மனைபுதூர்- 14.60, வீரபாண்டி-16, தேக்கடி-0.80, பெரியாறு-1, கூடலூர்-7.50, போடிநாயக்கனூர்-17.20, உத்தமபாளையம்-12, சோத்துப்பாறை-15.