தேனி மாவட்டத்தில் தொழிற் கல்வி பயிலும் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு, மாதாந்திர கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பொறியியல், மருத்துவம், விவசாயம், மேலாண்மை, சட்டம் ஆகிய தொழிற் கல்வி பயிலும் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், தொழிற் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 2,000, மாணவிகளுக்கு மாதம் ரூ. 2,250 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ங்ள்ஜ்.ஞ்ர்ய்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை குறித்த விவரத்தை, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் 04546-252185 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.