பெரியகுளம், செப். 23: பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிப் பகுதியில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஐந்தாவது ஆண்டாகக் கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலர் ஏ. மோகன் தலைமை வகித்தார். கீழவடகரை ஊராட்சி மன்றத் தலைவர் பி.டி. லட்சுமி தங்கப்பாண்டி, தொழிலதிபர் ஏ. முஸ்தபா, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஹரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழவடகரை பகுதிச் செயலர் ஜெயராஜ் வரவேற்றார்.
மாவட்ட தி.க. தலைவர் எஸ். ரெகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பேபி சாந்தா, எம். அன்புக்கரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மேலும், நல்லாசிரியர்கள் ஆர். வைகுண்டம், குப்புசாமி, தாமோதரன், கவிஞர் கவிக்கருப்பையா, கே. ஜெயராமன், நூலகர் ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டி, கோலப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, அஜீஸ் நன்றி கூறினார்.