Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, பொதுமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும்,சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

    கடமலைக்குண்டு அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட பேச்சியம்மாள் கோவில்பட்டியில், சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு, ஊராட்சிக் கிணற்றின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊராட்சிக் கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

      அப்பகுதி மக்கள் தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தோட்டத்தில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால், இப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த மயிலாடும்பாறை மற்றும் கடமலைக்குண்டு போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊராட்சி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

      அங்கு, ஊராட்சி மன்றத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாள்களில் குடிநீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.   இருப்பினும், 2 நாள்களில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai