Enable Javscript for better performance
குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் புதிய ரக நெல் சாகுபடி- Dinamani

சுடச்சுட

    

    குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் புதிய ரக நெல் சாகுபடி

    Published on : 27th March 2014 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர், கோ-51 என்ற புதிய ரக நெல்லை பயிரிட்டு அறுவடை செய்தனர்.

      110 நாளில் விளையக்கூடிய இந்த கோ-51 என்ற புதிய ரக நெல், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நெல் ரகத்தை குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 3ஆம் ஆண்டு மாணவ, மாணவியர் பாடத்திட்டத்தின்படி பயிரிட்டுள்ளனர்.

      இதற்காக, மாணவர்களுக்கு தலா 2 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கப்பட்டது. எனவே, விதை விதைப்பது முதல் நடவு, களையெடுத்தல், உரமிடுதல் மற்றும் அறுவடை வரையிலான அனைத்து தொழில்நுட்பங்களையும் மாணவர்களே மேற்கொண்டனர்.  மொத்தம் 1.20 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 டன் நெல் மகசூல் கிடைத்துள்ளது.

    இந்த ரகத்தின் தனித் தன்மையாக 10 சதவிகிதம் அதிக மகசூல் கிடைத்துள்ளது. மேலும், குலை நோய் மற்றும் தத்துப் பூச்சிகளுக்கு எதிராக வளரும் திறன், சமைப்பதற்கு ஏற்ற திறன், வறட்சியைத் தாங்கும் சக்தி போன்றவற்றை மாணவர்கள் செய்முறை மூலம் நேரடியாக அனுபவம் பெற்றனர்.

       இச் செய்முறை பாடத்திட்டத்தின் உதவிப் பேராசிரியர்கள் ஜெ. சுகுமார், பி. குஞ்சம்மாள், ஹெச். மாரியப்பன் ஆகியோர், மாணர்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர்.

      மேலும், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் இப்புதிய ரக நெல் அறுவடையை தொடக்கி வைத்தார். கல்லூரி உதவி இயக்குநர் மோகன் மற்றும் பேராசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai