Enable Javscript for better performance
வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைக்கு குரல் கொடுப்பேன்: மதிமுக வேட்பாளர் க.அழகுசுந்தரம்- Dinamani

சுடச்சுட

    

    வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைக்கு குரல் கொடுப்பேன்: மதிமுக வேட்பாளர் க.அழகுசுந்தரம்

    Published on : 27th March 2014 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய, கேரள அரசுகளால் வஞ்சிக்கப்பட்ட தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார உரிமைக்கு, மக்களவையில் குரல் கொடுப்பேன் என்று, தேனி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் க. அழகுசுந்தரம் உறுதி அளித்துள்ளார்.

      தேனியில், மக்களவைத் தேர்தல் பாஜக கூட்டணி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து, அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

      தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக, தேமுதிக, பாமக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் மதிமுக சார்பில் போட்டியிடுகிறேன். முல்லைப் பெரியாறு அணையின் எல்லைக் காவலரான வைகோவின் தம்பி என்ற முறையில், பொதுமக்கள் எனக்கு நல்லாதரவு அளித்து வருகின்றனர். மக்களவையிலும் மக்கள் பணியிலும் வைகோவின் நகலாக இருந்து செயல்படுவேன் என்று பொதுமக்களிடம் உறுதியளித்து வருகிறேன்.

      என்னை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய, கேரள அரசுகளால் வஞ்சிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார உரிமைக்கு குரல் கொடுப்பேன்.  மாவட்டத்தில் பிரதான கோரிக்கையாக உள்ள திண்டுக்கல்-லோயர் கேம்ப் புதிய ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்தவும், போடி-மதுரை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும், விருதுநகர் மாவட்ட இணைப்புச் சாலையான கிழவன்கோவில் சாலைத் திட்டப் பணியை தொடங்கவும் நடவடிக்கை எடுப்பேன்.  

      இதுவரை அரசு சார்பில் கலைக் கல்லூரி கூட இல்லாத சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய சட்டப்பேரவைக்கு உள்பட்ட பகுதிகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க முயற்சி மேற்கொள்வேன்.

      அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் வேளாண்மை விளைபொருள்களை சேமித்து வைத்து நல்ல விலைக்கு விற்க, குளிர்சாதன கிட்டங்கி வசதி, விற்பனை வசதி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai