Enable Javscript for better performance
வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      கண்டமனூர், இந்திரா நகர், பாலூத்து, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருசநாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 22 வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து, ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  வாக்குச் சாவடி மையங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள மேற்கூரைகளை சீரமைக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தள பாதை வசதி செய்து தரவும், தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதில், ஆண்டிபட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்நாத், க.மயிலை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    ரேஷன் கார்டு வாங்கித் தருவதாக மோசடி: இருவர் தலைமறைவு

    உத்தமபாளையம், மார்ச் 26: ரேஷன் கார்டு வாங்கித் தருவதாக மோசடி செய்த இருவரை, போலீஸார் தேடி வருகின்றனர்.

       தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீலையம்பட்டி கிராமம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் ரமேஷ் (33) என்பவர், இதே பகுதியைச் சேர்ந்த  நாகேந்திரன் (42) என்பவரிடம், புதிய ரேஷன் கார்டு வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.  அதற்காக, நாகேந்திரன் ரூ. 2 ஆயிரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரேஷன் கார்டு வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், ரமேஷ் தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

      இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், இதே பகுதியில் கம்பர் பள்ளித் தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டியன் மகன் பச்சையப்பன் (45) என்பவரை தூண்டிவிட்டதில், ரமேஷ் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த ரமேஷ், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில், சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாகிவிட்ட நாகேந்திரன் மற்றும் பச்சையப்பன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai