Enable Javscript for better performance
வைகை அணை​யை தூர்​வார நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டுமா?- Dinamani

சுடச்சுட

  

  தேனி,​திண்​டுக்​கல்,​மதுரை,​சிவ​கங்கை,​ராம​நா​த​பு​ரம் மாவட்ட மக்​க​ளின் ஜீவ நாடி​யாக விளங்​கும் வைகை அணையை தூர்​வாரி தண்​ணீ​ரின் கொள்​ளவை அதி​க​ரித்து உற்​பத்​தியை பெருக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்ற எதிர்​பார்ப்பு விவ​சா​யி​கள் மத்​தி​யில் ஏற்​பட்​டுள்​ளது.​

  தென் மாவட்​டங்​க​ளின் வறட்​சி​யைப் போக்க வேண்​டும் என்ற நோக்​கில் கடந்த 1955ஆம் வரு​டம் ஏப்​ரல்,​10ஆம் தேதி வைகை அணை கட்ட நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு,​1958ஆம் வரு​டம் கட்டி முடிக்​கப்​பட்​டது.​அணை​யின் முழுக் கொள்​ள​ளவு 6879 மில்​லி​யன் கன அடி.இதன் மூலம் நான்கு மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த 2,08,144 ஏக்​கர் விவ​சா​யி​கள் பயன்​பெற்று வரு​கின்​ற​னர்.​

  மேலும்,​நூற்​றுக்​கும் மேற்​பட்ட கிரா​மங்​கள்,​பேரூ​ராட்​சி​கள்,​நக​ராட்​சி​கள் மற்​றும் மாந​க​ராட்​சி​க​ளின் குடி​நீர் தேவை பூர்த்தி செய்​யப்​பட்டு வரு​கி​றது.​

  இவ்​வ​ளவு சிறப்பு வாய்ந்த வைகை அணை​யில் வண்​டல் மண் மற்​றும் மணல் 20 அடிக்கு மேலாக தேங்​கி​யுள்​ளது.இத​னால் தற்​போது அணை​யின் நீர்​பி​டிப்பு அளவு 14.16 ​(974 மில்​லி​யன் கன அடி நீர் பரப்​ப​ளவு)சத​வீ​தம் குறைந்​துள்​ள​தாக ஆய்​வில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

  இதன் மூலம் பல ஆயி​ரம் கன அடி தண்​ணீர் மழைக் காலங்​க​ளில் வீணாகி கட​லில் கலந்து வரு​கி​றது.இத​னைப் போக்க வைகை அணையை தூர் வார வேண்​டும் என விவ​சா​யி​கள் சங்​கத்​தி​னர் கோரிக்கை விடுத்து வந்​த​னர்.​

  இத​னை​ய​டுத்து 2000ஆம் வரு​டம் முதல் ஆய்வு கமிட்​டி​கள் அமைக்​கப்​பட்டு ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கி​றது.போட்​டிங் முறை அல்​லது ஜேசிபி இயந்​தி​ரத்​தின் மூலம் தூர் வாரப்​ப​டும் எனத் தெரி​விக்​கப்​பட்​டது.போட்​டிங் முறை​யின் மூலம் தூர்​வார 221.40 கோடி செல​வா​கும் என​வும்,​ஜேசிபி இயந்​தி​ரத்​தின் மூலம் தூர்​வா​ரி​னால் குறைந்த அள​வில் செல​வா​கும் என​வும் கூறப்​பட்​டது.​மேலும்,​இதி​லி​ருந்து பிரித்து எடுக்​கப்​ப​டும் வண்​டல் மண்,​விவ​சா​யி​க​ளுக்கு இல​வ​ச​மா​க​வும்,​சவுடு மண் செங்​கல் காள​வா​சல் உரி​மை​யா​ளர்​க​ளுக்கு குறைந்த விலை​யி​லும்,​மணலை குவா​ரி​கள் அமைத்து விற்​பனை செய்​வது என தீர்​மா​னிக்​கப்​பட்​டது.ஆனால் செயல்​வ​டி​வம் பெற​வில்லை.​

  கடந்த பத்து வரு​டங்​க​ளாக பொதுப்​ப​ணித் துறை அமைச்​சர்​கள் மற்​றும் அதி​கா​ரி​கள் வந்து பார்​வை​யிட்டு விரை​வில் தூர்​வா​ரப்​ப​டும் என அறி​வித்​து​விட்​டுச் செல்​கின்​ற​னர்.​ஆனால்,​இத் திட்​டத்தை செயல்​ப​டுத்த இப் பகு​தி​க​ளைச் சேர்ந்த சட்​டப்​பே​ரவை உறுப்​பி​னர்​கள் நட​வ​டிக்கை எடுக்​க​வில்லை என்​கி​றார்​கள் விவ​சா​யி​கள்.​

  இது​கு​றித்து ஆண்​டி​பட்டி சட்​டப்​பே​ரவை உறுப்​பி​னர் தங்​கத்​த​மிழ்ச்​செல்​வனை பல முறை தொலை​பே​சி​யில் தொடர்பு கொண்​ட​போது,​தொடர்​பினை துண்​டித்​தார்.இத​னால் அவ​ரி​டம் விவ​ரம் பெற முடி​ய​வில்லை

  இது​கு​றித்து வைகை அணை உத​விச் செயற்​பொ​றி​யா​ளர் மொக்​க​மா​யன்:​

  வைகை அணை தூர்​வா​ரு​வது குறித்து ஆய்வு செய்​யப்​பட்டு,​தற்​போது புதிய வரை​வுத் திட்​டம் தயா​ரிக்​கப்​பட்​டுள்​ளது.இத் திட்​டம்,​வைகை அணை​யில் உள்ள வண்​டல் மண்ணை விவ​சா​யி​களை நேர​டி​யாக எடுத்​துக் கொள்ள அனு​ம​திப்​பது அல்​லது டெண்​டர் முறை​யில் மண்ணை எடுக்க அனு​ம​திப்​பது குறித்து தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.இத் திட்​டம் குறித்து,​சென்​னை​யில் உள்ள உயர் அதி​கா​ரி​க​ளு​டன் ஆலோ​சனை செய்து,​விரை​வில் தூர்​வார நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​றார்.​

  மதுரை-​தேனி விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் எம்.பாண்​டி​யன் கூறி​யது:மழைக் காலத்​தில் அடித்து வரப்​பட்​டுள்ள வண்​டல் மண் மற்​றும் மணல் 20 அடிக்கு மேலா​கத் தேங்​கி​யுள்​ளது.இத​னால் நீரைத் தேக்க முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.எனவே,​வைகை அணையை தூர் வார அரசு தாம​த​மின்றி உடனே நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ரசா​யன உரங்​களை போட்டு விவ​சாய நிலங்​களை மலட்டு தன்​மை​யு​டை​ய​தாக ஆக்​கி​விட்​டார்​கள்.இத​னால் விவ​சாய உற்​பத்தி அளவு குறைந்து வரு​கி​றது.அணையை தூர்​வா​ரும் போது எடுக்​கப்​ப​டும் இம்​மி​கள் எனப்​ப​டும் அதிக சத்​து​கள் அடங்​கிய வண்​டல் மண்ணை விவ​சா​யி​க​ளுக்கு இல​வ​ச​மாக வழங்கி அதிக உற்​பத்​தியை பெருக்க அரசு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்​றார்.​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai