Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தேனியில் 20,628 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை, தேனி மாவட்டத்தில் தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 20,628 மாணவ, மாணவியர் எழுதினர்.

    புதன்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் தலா 30 தேர்வு மையங்கள் வீதம் மொத்தம் 60 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

      பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் உள்ள 96 பள்ளிகளைச் சேர்ந்த 10,487 மாணவ, மாணவிகள், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள 86 பள்ளிகளைச்  சேர்ந்த 9,734 மாணவ, மாணவிகள் மற்றும் 903 தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 21, 124 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

      ஆனால், மொத்தம் 20,628 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 496 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க, உத்தமபாளையம் கல்வி மாவட்டத்துக்கு 55 பறக்கும் படை அலுவலர்கள், பெரியகுளம் கல்வி மாவட்டத்துக்கு 66 பறக்கும் படை அலுவலர்கள் என மொத்தம் 121 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.   தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு உடன் சென்றிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai