சுடச்சுட

  

  கம்பம் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது பொய்ப்புகார் அளித்தவரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

  கம்பம் அருகே க.புதுப்பட்டி, இந்திராநகர் காலனியைச் சேர்ந்தவர் சுருளிவேல் மகன் முருகேசன். இவர், தனது மைனர் வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தனது மனைவி, மகன் மற்றும் மனைவியின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷிடம் புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில், இந்தப் புகார் குறித்து சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நடத்திய விசாரணையில், குடும்பப் பிரச்னையில் பொய்யான தகவல்களுடன் முருகேசன் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது.

  இதையடுத்து, அவரை உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai