சுடச்சுட

  

  பெரியகுளம் அருகே இன்று நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

  பெரியகுளம் அருகிலுள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமியின் 16 வயது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் குமாருக்கும் (27) புதன்கிழமை காலையில் புல்லாக்காபட்டியில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை அறிந்த குழந்தைகள் அலகு நலக்குழுவினர் ராஜா தலைமையில் சண்முகவள்ளி, விஜயலட்சுமி, மெர்லின் மற்றும் தேவதானப்பட்டி உதவி ஆய்வாளர் தங்கசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்று இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தி, ஒப்புதல் வாக்குமூலம் எழுதி வாங்கினர். புதன்கிழமை காலை 10 மணிக்கு குழுந்தைகள் அலகு நல அலுவலர் சிவக்குமாரிடம் நேரில் ஆஜராகவேண்டும் என இருவீட்டாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai