சுடச்சுட

    

    டிராக்டரை ஏற்றி சார்பு ஆய்வாளரை கொல்ல முயற்சி: தந்தை, மகன் கைது

    By DN  |   Published on : 01st April 2015 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரில் மணல் டிராக்டரை ஏற்றி சிறப்பு சார்பு ஆய்வாளரை கொலை செய்ய முன்றதாக, திங்கள்கிழமை தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

    தேனி மாவட்டம் கூடலூர் சிறப்பு சார்வு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீஸார் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே வாகனச் சோதனையில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டரை பார்த்திபன் நிறுத்த முயற்சித்தார். ஆனால், டிராக்டரை நிறுத்தாமல், பார்த்திபன் மீது ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. அவர் சுதாரித்துக் கொண்டு தப்பினார். பின்னர், போலீஸார் அந்த டிராக்டரை துரத்திப் பிடித்தனர். விசாரணையில், டிராக்டரில் இருந்த கருணாநிதி காலனியைச் உரிமையாளர் ஈஸ்வரன்(52), அவரது மகன் ஜெயபிரகாஷ்(28) ஆகியோர் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாகவும், இதைத்தடுக்க முயற்சித்த சிறப்பு சார்பு ஆய்வாளரை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து,  ஈஸ்வரன், ஜெயபிரகாஷ் ஆகியோரை கைது செய்தார். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai