சுடச்சுட

  

  போடி காவல்துறையினரை கண்டித்து நீதிமன்றம் அருகே செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

  போடி காவல்துறையினர் வழக்குரைஞர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்றும், போலீஸாரைக் கண்டித்தும் போடி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப்பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் வழக்குரைஞர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் நீதிமன்றம் அருகிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

  அவருக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், போராட்டக் குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்குரைஞர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

  போடி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடரப்போவதாக, வழக்குரைஞர்கள் அறிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai