Enable Javscript for better performance
ரூ.1.75 கோடி செலவில் விளையாட்டு மேம்பாட்டு பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.ஒரு கோடியே 75 லட்சத்து 55 ஆயிரம் செலவில் விளையாட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

         இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் 15 ஏக்கர் பரப்பளவில் பார்வையாளர் மாடத்துடன் கூடிய விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

        இதில், உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு பயிற்சி முகாம், கோடைகால பயிற்சி முகாம், மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

           மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ரூ.ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது. ரூ.55 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு விடுதி கட்டுமானப் பணிகளும், ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai