சுடச்சுட

    

    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளுக்கு மானிய உதவியை ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் வழங்கினார்.

         தோட்டக்கலைத் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் மானியமாக வழங்கப்பட்டன. மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, 15 நாள்களுக்குள் மனுதாரருக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார்.

          மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அஜினா பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai