Enable Javscript for better performance
ஆண்டிபட்டியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    By ஆண்டிபட்டி  |   Published on : 02nd April 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி பேரூராட்சியில் பல்வேறு இடங்களிலிருந்தும் கோழிக்கழிவுகள் ஆண்டிபட்டி சந்தை, எம்ஜிஆர் சிலை மற்றும் மதுரைச் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இக்கழிவுகளுக்காக ஏராளமான தெருநாய்கள் இப்பகுயில் குவிந்து காணப்படுகின்றன. இக்கழிவுகளை உண்ணும்போது, நாய்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அப்பகுதியில் நடமாடுவோருக்கு தொல்லை கொடுத்து வருகின்றன.

    இந்த நாய்கள் பிற பகுதிகளிலும் நடமாடும் போது, சாலைகளில் நடந்து செல்வோர், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரைத் துரத்திச் சென்று கடிக்கின்றன. இந்த வகையில் பலரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இது குறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் புகார் தெரிவித்தும் நடவடிககை எடுக்கவில்லை.

    மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் மதிப்பிலான நாய்பிடிக்கும் வாகனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்த வாகனம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த வாகனத்தை பயன்படுத்தி தெருநாய்கள் நடமாட்டத்தை ஒடுக்க பேரூராட்சி நிர்வாகம நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai