சுடச்சுட

    

    தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டவும், சீரமைக்கவும் ஊராட்சி நிர்வாகத்துக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

    கிராமங்களில் திறந்த நிலைக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தோண்டுதல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஊராட்சி நிர்வாகத்துக்கு வங்கி வரைவோலை மூலம் ரூ.5,000 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். கிணறு, ஆழ்துளை கிணறு தோண்டுதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் பதிவுச் சான்று பெற்ற நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். கிணறு தோண்டுதல் மற்றும் சீரமைக்கும் பணி மேற்பார்வைக்கு பதிவுச் சான்று பெற விரும்புவோர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.15 ஆயிரத்துக்கான வரைவோலை செலுத்தி விண்ணப்பிக்கலாம். கிராமங்களில் கிணறு,ஆழ்துளை கிணறு தோண்டுதல் மற்றும் சீரமைக்கும் பணி அனுமதி பெற்றும், பதிவுபெற்ற நிறுவனத்தின் மேற்பார்வையிலும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் நடைபெறுவதை ஊராட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai