குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை
By தேனி | Published on : 02nd April 2015 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் அறிவிக்கப்பட்டுள்ள குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் கே.தயாளன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் திட்டங்களை மேம்படுத்தாமலும், சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காமலும், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகையை இருமடங்காக உயர்த்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்டுள்ள இந்தக் குடிநீர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.